AI-யால் வேலை போயிடும்னு யார் சொன்னா?.. எலான் மஸ்க் கொடுத்த சூப்பர் அப்டேட்...
சமீப காலமாகவே மென் பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவான AI மிகவும் பிரபலமாகி வருகிறது. கோடிங்கை எழுத மனிதர்கள் பல மணி நேரம் எடுத்து கொள்ளும் நிலையில் AI மிகவும் குறைவான நேரத்தில் Coding-ஐ எழுதி விடுகிறது.
இதன் காரணமாக மென்பொருள் துறையில் பலரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சமீப காலமாகவே பல பிரபலமான முக்கிய மென்பொருள் நிறுவனங்கள் பலரையும் வேலையை விட்டு தூக்கி விட்டன. இதையடுத்து AI மனிதர்களுக்கு எதிராக மாறும்.. மென்பொருள் துறையில் பலரும் வேலை இழப்பார்கள் என்றெல்லாம் பலரும் கூறி வருகிறார்கள்..
இது மென்பொருள் துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம் பீதியை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த எலன் மஸ்க் ‘AI -யால் வேலை இழப்பு ஏற்படாது.. நமது வேலை மாற்றமடையும்.. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.. இன்று கணினி செய்யும் கணக்குகளை ஒரு காலத்தில் மனிதர்கள் பெரிய அலுவலகத்தில் உட்கார்ந்து செய்து கொண்டிருந்தனர். அதெல்லாம் இப்போது மாறவில்லையா? அதுபோல சூப்பர் இன்டெலிஜென்ஸ் மற்றும் அதிநவீன ரோபோக்களால் நம் வாழ்வும் மேம்படும்.. வேலை வாய்ப்புகள் மாற்றமடையும்’ என்று தெரிவித்திருக்கிறார்.