1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Rajabhakse relieved from PM post

அடிபணிந்த ராஜபக்சே: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகல்

இலங்கை
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பையொட்டி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகுகிறார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார்
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை.  திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜபக்சே பதவி விலக தீர்ப்பளித்தது. அதன்படி ராஜபசே தனது ராஜினாமா கடிதத்தை சிறிசேனாவிற்கு இன்று அனுப்பியுள்ளார்.
 
நாளை மீண்டும் ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமராக பதவியேற்கிறார்.
அடுத்த கட்டுரையில்
2வதும் பெண் குழந்தை: குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்; பெரம்பலூரில் கொடூரம்