புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (10:56 IST)

டிசம்பர் 5-ல் புதிய பிரதமர் -இலங்கை அரசியல் நிலவரம்

அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு இடையிலான பிரச்சனைகள் முறறுப்பெற்று தீர்வு காணும் நேரம் அமைந்துள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

இலங்கையில் கடந்த 40 நாட்களாக அரசியல் நெருக்கடி சூழல் உருவாகியுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரனிலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் பெரிதாகி அதிபர் ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அக்டோபர் 26 ஆம் தேதி உத்தரவிட்டார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார்.

இந்த முடிவுக்கு இலங்கையின் மற்ற எதிர்கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியா போன்ற அண்டை நாடுகளும் மற்ற உலக நாடுகள் கூட அதிபரின் இந்த முடிவைக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க் கட்சிகள் ஒன்று கூடி புதிய பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர்.

அதனால் அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தையும் முடக்கினார். இதையடுத்து கடந்த ஒரு மாதமாக இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்றத்திலும் ராஜபக்சே பெரும்பாண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க இலங்கையின் மற்ற கட்சிகள் ஒன்று கூடி அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். நிலைமையைப் புரிந்துகொண்ட அதிபர் சமாதானத்திற்கு இறங்கி வந்துள்ளார். அதில் டிசம்பர் 5 ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை நியமிக்கக் கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் ரணிலை மட்டும் மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இலங்கையின் புதிய பிரதமர் யாரென்ற விவரம் தெரியவரும்.