1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (11:24 IST)

உக்ரைன் நகரங்களில் முடங்கி கிடந்த பொதுமக்‍களின் நடமாட்டம் துவங்கியது!

உக்ரைன் நகரங்களில் முடங்கி கிடந்த பொதுமக்‍களின் நடமாட்டம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

 
உக்‍ரைன் மீது ரஷ்யா தாக்‍குதலை தொடங்கி 40 நாட்களை கடந்து விட்ட போதும், சண்டையை நிறுத்த இரு நாடுகள் இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே அந்நாட்டின் தலைநகர் கிவ், கார்கிவ், லிவிவ் போன்ற நகரங்களில் ரஷ்ய ராணுவத்தினர் தாக்‍குதல் நடத்தியதால் பொதுமக்‍கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்‍குச் சென்றனர். 
 
ஆனால் இப்போது உக்‍ரைன் தலைநகர் கிவிலிருந்து ரஷ்ய ராணுவம் விலக்‍கிக்‍ கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே வெளியேறிய பொதுமக்‍கள் மீண்டும் சொந்த ஊர்களுக்‍கு திரும்பி வருகின்றனர். இதனால் இந்நகரங்களில் முடங்கி கிடந்த பொதுமக்‍களின் நடமாட்டம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.