திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (14:37 IST)

தமிழ் கற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரியாக உள்ளதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, 'சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என்று பேசியுள்ளார்.

மேலும் மாணவர்கள் அனைவரும் தமிழை கற்று கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரதமர் மோடி, தான் இதுவரை தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த திடீர் தமிழ்ப்பாசம் தமிழக மக்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமரின் இந்த பேச்சு குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் கைவரிசையை உடனே காட்ட தொடங்கிவிட்டனர்.