மன அழுத்தத்தால் உருவாகும் இதய பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மன அழுத்த பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிலையில் இது ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்பட வழிவகுக்கிறது.
தற்போதைய காலத்தில் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் (Broken Heart Syndrome) போன்ற மனநல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த வகை மன அழுத்த பிரச்சினைகள் அதன் தன்மையை பொறுத்து மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
மன அழுத்தத்தின் வகைகள்:
அக்யூட் ஸ்ட்ரெஸ் (acute stress) என்பது பொதுவான ஒன்று. அரிதாக ஏற்படும் இந்த மன அழுத்தம் கொஞ்சம் நேரம் வரை நீடித்து பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக வெகு அரிதாக ஏதோ ஒரு விஷயத்திற்காக கோபம் அல்லது உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவை. இதனால் தலைவலி, கழுத்து வலி ஏற்படலாம்.
எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் (Episodic acute stress) அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம் ஆகும். இது அடிக்கடி ஏற்படக்கூடியதாக இருந்தாலும் குறைந்த காலமே நீடிக்கும். குறுகிய காலம் நீடிக்கும் இது ஆக்ரோஷம், பொறுமையற்ற தன்மையை ஏற்படுத்தும்.
க்ரோனிக் ஸ்ட்ரெஸ் (chronic stress) நீண்ட காலம் நீடிக்கக் கூடிய மன அழுத்தம் ஆகும். வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம், மோசமான சம்பவங்களால் இது உருவாகிறது. நீண்ட காலத்திற்கு நீடிக்கும் இந்த மன அழுத்தமானது சோர்வை அளிப்பதுடன், அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும். இது இதயத்தை பலவீனப்படுத்தும்.
மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?
ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் என்பது கடும் மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய இதய நோய்களாகும். எப்போதும் சிரித்த முகத்துடன், நேர்மறை எண்ணங்களுடன் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தினசரி உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை நீக்குவதுடன், இதய தசைகளை வலுப்படுத்தி நோய்கள் வராமல் தடுக்கும். மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியமான உணவுகள் மன அழுத்தத்தை குறைக்கும் மன அழுத்தம் ஏற்படுபவர்கள் தாங்கள் எந்த வகையில் உள்ளார்கள் என்பதை அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.