வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (21:33 IST)

17 வயது சிறுவன் அரியவகை நோயினால் பாதிப்பு

wolf syndrome
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன்  அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் லலித்.  இவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், WereWolf Syndrome- என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், லலித்தின் உடல் முழுவதும் அதிகப்படியான முடிகள் வளர்ந்துள்ளது.

இதனால், அவருடன் படிக்கும் சிறுவர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். அதே சமயம் அவருடன் பழகவும் அச்சப்படுகின்றனர்.

அவரது தந்தை ஒரு விவசாயி, பிறக்கும் போதியே இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் போன்று உலகில் 50 பேர் மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Edited by Sinoj