வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (11:04 IST)

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபரை சந்திக்கின்றாரா பிரதமர் மோடி?

China - Windmill
பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள நிலையில் அங்கு சீன அதிபரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் 15 ஆவது மாநாடு இன்று தொடங்குகிறது. 
 
தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா சென்றார். இந்த நிலையில் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த மாநாட்டின்  முடிவில் பிரதமர் மோடி மற்றும்  ஜி ஜின்பிங்  சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த சந்திப்பு குறித்து அரசு முறை பயணத்தின் பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும்  இந்திய சீன மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva