1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (09:18 IST)

மீண்டும் வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி.. இம்முறை எந்தெந்த நாடுகள் தெரியுமா?

PM Modi
பிரதமராக மோடி பதவி ஏற்றதிலிருந்து கடந்த 9 ஆண்டுகளில் அவர் ஏராளமான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ளார் என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 
பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு  சுற்று பயணம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 24ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 25ஆம் தேதி கிரீஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கிரீஸ் நாட்டுக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran