வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (09:02 IST)

டைம்ஸ் நெள அடுத்து மேலும் ஒரு கருத்துக்கணிப்பு.. மீண்டும் மோடி பிரதமர் ஆவது உறுதி என தகவல்..!

PM Modi
சமீபத்தில் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு எடுத்த நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் டைம்ஸ் நெள ஊடகத்தை அடுத்து தற்போது போல்ஸ்டார்ஸ் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பிலும் மோடி பிரதமராக ஆட்சியை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்றும் 54 சதவீத ஆதரவு பாஜகவுக்கு இருக்கிறது என்றும்  அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 37 சதவீதம் பேர் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கூறியுள்ளனர். 
 
மேலும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என வெகு சிலரே தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது,. சமீபத்தில் சுதந்திர தின விழாவில் அடுத்த ஆண்டும் மீண்டும் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி கூறியதை இந்த கருத்துக்கணிப்புகள் உறுதியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva