1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (08:52 IST)

ஜோ பைடன் மனைவிக்கு வைர நெக்லஸ்; பிரதமர் மோடி அளித்த பரிசு!

PM Modi
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார்.



பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பார்வையாளர்களாக கண்டு களித்தனர்.

அதன்பின்னர் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 7.5 கேரட் தரத்திலான இந்த வைரம் முழுவதும் ஆய்வகத்தில் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனாலும் இயற்கையாக பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வைரங்களுக்கு நிகரான பொலிவையும், ஒளிவீசும் தன்மையையும் இது கொண்டிருக்கிறது.

Edit by Prasanth.K