1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (20:23 IST)

மணிப்பூர் கலவரம் : 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

Manipur
மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களாகத் தொடர்ந்து  இரு பிரிவினருக்கு இடையே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்  இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில்  இரு பிரிவினருக்கு இடையே  கடந்த மாதம் 3 ஆம் தேதி கலவரம் மூண்டது. இக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

இந்தக் கலவரத்தில்  100க்கும் மேற்பட்ட  மக்கள் உயிரிழந்துள்ளதாகவும்  நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில்  எதிர்க்கட்சியான காங்கிரஸ்  மத்திய பாஜக அரசை குறை கூறி வரும் நிலையில், இன்று காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 10 முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளன.

அதில்,  ''மணிப்பூரில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்விவகாரத்தில்  பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும்'' என்று கூறியுள்ளன.