1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (14:34 IST)

விஜய் கொடுத்த வைர நெக்லஸ்... மாணவி நந்தினி எடுத்த திடீர் முடிவு...!

நடிகர் விஜய் நடிப்பை இதோடு நிறுத்திவிட்டு விரவாயில் எம்ஜிஆர் ஸ்டைலில் அரசியலில் இறங்கவுள்ளார். அதற்கான முதல் அடித்தளமாக இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினார். 
 
இதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
 
இந்த விழாவில் 600க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார் விஜய். இது குறித்து பேசிய நந்தினி, நான் விஜய்யை சந்திக்க போறேன் என்று தெரியும் ஆனால் வைர நெக்லஸ் எதிர்பாராத பரிசாக இருந்தது. 
 
தான் இதுவரை தங்கத்தில் கூட நெக்லஸ் போட்டதுமில்லை... அதற்கான வசதியும் எனக்கு கிடைத்ததில்லை... தற்போது விஜய் கையில் வாங்கியிருக்கும் இந்த நெக்லஸை நான் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் மெர்சல் படம் தனக்கு பிடித்துள்ளதாக நந்தினி தெரிவித்துள்ளார்.