நம்ம அதிரடி மன்னர் யுவராஜ் ஏன் இப்படி செய்தார் ? குவியும் விமர்சனம்

yuvaraj
Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (20:20 IST)
இந்திய கிரிக்கெட்டிலிருந்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவர் தற்போது கனடாவில் நடைபெறுகின்ற  குளோபல் டி20 தொடரில் விளையாடி வருகிறார். 
இந்த தொடரில் டொரண்டோ அணியின்  சார்பாக கேப்டனாக உள்ள யுவராஜ் தனது முதல் போட்டின் போது , பந்தை சரியாக அடிக்காமல், பிரபல கிரிக்கெட் வீரர் என்ற அடையாளமே இல்லாமல்  அவர் விளையாடியதாக அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
 
அதேபோல் டி- 20 போட்டியில் மந்தமாக விளையாடிய அவர் , ஒரு பந்துவீச்சின் போது  அவுட்டே ஆகாமலேயே, ஸ்டம்பிங் ஆனதாக சொல்லி  களதிலிருந்து வெளியேறினார், இதனால் அணியினர் கவலை அடைந்தனர்.
 
இதன்பின்னர் ,அடுத்து நடக்கும் போட்டியில்  யுவராஜின் பெர்மாமன்ஸ் எப்படி இருக்கும்   என ரசிகர்கள் ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்தனர். சில கவலையுடன் இருந்தனர்.
 
இந்நிலையில்  அந்த போட்டிக்கு முன்பு யுவராஜ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அவரரருகே  பென் கட்டிங் தன் காதலியும், வருங்கால மனைவியுமான எரிக் ஹோலன்ட்டுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களிடையே சென்ற யுவராஜ், திருமணம் எப்ப செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு இருவரும் சிரித்துக்கொண்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து நடைபெற்ற போட்டியில் யுவராஜ் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :