வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (17:45 IST)

மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி

பிலிப்பைன்ஸில் மழை வெள்ளத்தின் நடுவே, தண்ணீரில் மிதக்கும் தேவாலயத்தில் திருமணம் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
பிலிப்பைன்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் வடபகுதியில் தலைநகரான மணிலாவில் கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 
 
இந்நிலையில் காதல் ஜோடி ஒன்று மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஜோடி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த தேவாலயத்திலும் மழைநீர் புகுந்துவிட்டது.
 
இந்த ஜோடி தேவாலயத்திற்கு படகில் சென்று மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்துக்கொண்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.