வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

இன்றுமுதல் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் திருமணங்கள்

ஆன்லைன் என்பது உலகில் உள்ள மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. திரைப்படம் பார்க்க டிக்கெட் எடுப்பது முதல் வீட்டிற்கு தேவையான சின்னச்சின்ன பொருட்கள் வாங்குவது வரை ஆன்லைனை மக்கள் நாட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்றுமுதல் பதிவு திருமணங்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பதிவு திருமணம் செய்பவர்கள் இதுவரை பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றே பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் இருந்தது. ஆனால் இன்று முதல் சோதனை ரீதியில் பதிவு திருமணங்களை ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் பத்திரப்பதிவு முறை 'ஸ்டார் 2,0' என்ற சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது திருமணங்களும் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. 
 
இந்த சாப்ட்வேர் மூலம் திருமணம் மட்டுமின்றி பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கல், சீட்டு, சங்கம், கூட்டு நிறுவனம் ஆகியவற்றையும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்றும் இதற்கான பயிற்சிகள் கடந்த சில நாட்களாக சார்பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.