வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (09:55 IST)

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் - பேஸ்புக் லைவில் திருமணம் செய்த காதல் ஜோடி

கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அஞ்சனா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் கிரண்குமார் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான்.ஆகவே வீட்டிலிருந்து வெளியேறினார் அஞ்சனா.
 
இதனிடையே தனது மகளை கிரண் கடத்திவிட்டதாக அஞ்சனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கிரண்குமார்-அஞ்சனா தங்களது திருமணத்தை பேஸ்புக் லைவ் வீடியோவாக வெளியிட்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.