என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!
பாகிஸ்தானை சேர்ந்த நீக்கிட்டா நாக் தேவ் என்ற பெண், தனது கணவர் விக்ரம் நாக் தேவ் தன்னை கராச்சியில் கைவிட்டுவிட்டு, டெல்லியில் ரகசியமாக இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாகக் குற்றம் சாட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான வீடியோ மூலம் நீதிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தூரில் நீண்ட கால விசாவுடன் வசிக்கும் பாகிஸ்தானிய வம்சாவளியை சேர்ந்த விக்ரமை, நீக்கிட்டா ஜனவரி 2020 இல் கராச்சியில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் இந்தியா அழைத்து வரப்பட்ட நீக்கிட்டா, ஜூலை 2020 இல் "விசா சிக்கல்" என கூறி அட்டாரி எல்லையில் கைவிடப்பட்டு கட்டாயமாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.
அன்றிலிருந்து விக்ரம் தன்னை இந்தியாவுக்கு அழைக்க மறுத்து வருவதாகவும், மேலும், திருமணத்திற்கு பிறகு தனது கணவர் உறவினர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், மாமனார் அதற்கு ஆதரவளித்ததாகவும் நீக்கிட்டா குற்றம் சாட்டினார். தற்போது விக்ரம் டெல்லியில் வேறொரு பெண்ணை மணக்க திட்டமிடுவதை அறிந்து, நீக்கிட்டா ஜனவரி 2025 இல் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் மத்தியஸ்தம் தோல்வியடைந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் இந்திய குடிமக்கள் இல்லாததால் விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த அந்த மையம் ஏப்ரல் 2025 இல் பரிந்துரைத்தது. இந்தூர் ஆட்சியர் ஆஷிஷ் சிங் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva