இந்துக்கள் மேல கை வைக்கக் கூடாது: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை!

Prasanth Karthick| Last Modified வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:43 IST)
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏற்பட்டுள்ள போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த கலவரம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ”வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால் ரத்தம்தான் சிந்தும். இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியர்கள் வன்முறைக்கு இலக்காகி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் உள்ள சூழலை காரணமாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரான இந்தி, சீக்கிய மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :