ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (14:12 IST)

இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? வைரலாகும் புகைப்படம்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன்-2'


 
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளனர். இப்படத்தில் காஜல் அகர்வால்,  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமொன்றில் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியா பவானி சங்கர்,“நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்களது செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதெல்லாம் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். ஆனால் கமல்ஹாசனுடன், எனக்கு பிடித்த நடிகரான சித்தார் மற்றும் நடிகை காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நிச்சயம் நான் நினைக்கவில்லை.


 
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிப்பதெல்லாம் ஒரு ஆசீர்வாதம். ஒரே நேரத்தில் அத்தனை ஆசீர்வாதங்களும் எனக்கு கிடைத்துள்ளது போன்று தோன்றுகிறது என்று கூறி புகைப்படத்துடன் இஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்ஸ் அவருக்கு வாழ்த்துக்கள் கூறிவருவதோடு இந்த புகைப்படம் இந்தியன் 2 படத்தில் பிரியாவின் லுக்  என்று தெரிவித்து வருகின்றனர்.