”பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும்”.. மோடிக்கு சினிமா சங்கம் கோரிக்கை

Last Updated: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (18:40 IST)
இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து, மத்தியில் ஆளும் பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் லடாக் மற்றும் காஷ்மீர் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான உறவுகளையும் துண்டித்து கொள்வதாகவும் அறிவித்தது.

இதை தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக தடை செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய சினிமா திரைப்படத்துறையில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் தயாரிப்பாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடி உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும், அது வரை சினிமா மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்ப மறுக்கிறோம் என இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :