1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:12 IST)

பாகிஸ்தான் அமெரிக்காவின் உறவு நாடு - அமெரிக்கா தகவல்

அமெரிக்க அதிபர்  ஜோபைடன் பாகிஸ்தானை பயங்கர ஆயுதங்கள் வைத்துள்ள ஆபத்தான நாடு என கூறிய நிலையில் தற்போது உறவு நாடு என அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதாக கடும் விமர்சனம் செய்தார்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 பக்கம் ஆவணங்களை அவர் வெளியிட்டார். அதில் சீனா ரஷ்யா ஆகிய நாடுகளில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால் இந்த பட்டியலில் பாகிஸ்தான் இல்லாத நிலையில் பாகிஸ்தானை அபாயகரமான நாடாக ஜோ பைடன் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிபர் பைடன் கூறிய கருத்திற்கு மாறாக தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் நாடு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திறன் மீது அமெரிக்காவுக்கு நம்பிக்கையுண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வளமுள்ள பாகிஸ்தானை நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தான் எங்களுக்கு உறவு நாடு என்று கூறியுள்ளார்.

Edited by Sinoj