1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (01:45 IST)

159 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்த ஜப்பான் பெண் மரணம்

ஜப்பான் நாட்டில் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் ஓவர்டைமாக தொடர்ந்து 159 மணி நேரம் பணிபுரிந்ததால் திடீரென மரணம் அடைந்தார்.



 
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 31 வயது பெண் மிவா சடோ. இவர் விடுமுறையே எடுக்காமல் கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக இருந்தார். ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுக்கும் மிவா சடோ சமீபத்தில் ஓவர் டைம் வேலை பார்ப்பதாக கூறி தொடர்ந்து 159 மணி நேரம் பணிபுரிந்தார்
 
இந்த நிலையில் பணியில் இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்த மிவா சடோ, மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். ஏற்கனவே இதயநோய் பாதிப்பு அடைந்த அவர் ஒவர்டைம் பார்த்ததால் மரணம் அடைந்துவிட்டதாகவும் இதுகுறித்து ஜப்பான் தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.