1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2017 (19:00 IST)

இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகளை தேடும் ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை கண்டறிந்து வெடிக்கச் செய்து வருகிறது ஜப்பான்.


 

 
ஜப்பானின் அக்கானிவா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத குண்டுகளை ஜப்பான் கண்டறிந்துள்ளது.
 
இந்த குண்டுகளை செயலிழக்க முடியாது என்பதால் அவற்றைப் பாதுகப்பான கடல் பகுதிகளில் வெடிக்கச் செய்து வருகிறது. இதுவரை 103 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 2000 குண்டுகள் மற்றும் வெடி மருந்துக்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்து ஜப்பான் கண்டறிந்து வெடிக்கச் செய்வதற்கு 70 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.