1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Omran who caught in Syria war current situation

சிரியா போர்: இந்த சிறுவன் உங்கள் நினைவுக்கு வருகிறானா??

சிரியா போர்
கடந்தாண்டு சிரியாவில் நடந்த போரின் போது அலெப்போ நகரை மீட்க அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. 


 
 
அந்த தாக்குதலின் போது குவாட்ரிஜ் என்ற இடத்தில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதனால் அலெப்போ நகரம் போர்க்களமானது. 
 
அந்த சிரியா போரில் உலக மக்கள் கவனத்தை திசை திரும்பிய சிறுவன் ஓம்ரான் தக்னீஷ். உடல் முழுவதும் தூசியுடன் தலையில் இரத்த காயத்துடன் சிறுவன் மீட்கப்படும் வீடியோ மற்றும் அவனது புகைப்படம் வைரலாக பரவியது.
 
அந்த சிறுவனுக்காக உலக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தற்போது ஓம்ரான் நல்ல ஆரோக்கியத்துடன் தன் பெற்றோரோடு இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இதைச் செய்யாதவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? - விளாசும் தங்கர்பச்சான்