1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (18:37 IST)

சவுதி அரேபியாவுக்கும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: பெரும் பரபரப்பு

தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, பிரேசில் ஹாங்காங் உள்பட ஒருசில நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் போன்ற கொடிய வைரஸ் தற்போது சவுதி அரேபியா உள்ளே நுழைந்து விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தென் ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி அரேபியா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது
 
எனினும் சவுதி அரேபிய மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அந்நாட்டு அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
சவுதி அரேபியாவில் உள்ளேயும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.