விமானத்தை இஸ்ரேலில் மோதி வெடிக்க திட்டம்!.. துணை விமானி வாக்குமூலம்!...
கடந்த 30ம் தேதி துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஃபிளை துபாய் விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதிலிருந்து துணை விமானி ஸ்மித் மச்சாரை கோடாரியாள் தாக்கிவிட்டு விமானத்தை கீழே இறக்கி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால் பயணிகளின் உதவியோடு அவர்கள் திட்டத்தை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் காயம்பட்ட நிலையிலும் விமானத்தை பத்திரமாக துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் 174 பயணிகளின் உயர் காப்பாற்றப்பட்டது..
விபத்தை ஏற்படுத்த முயன்ற துணை விமானி அல் ஹமாமி ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் மத அடிப்படைவாதி எனவும், தீவிரவாத குழுக்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்ததும் தெரியவந்திருக்கிறது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், விமானத்தை இஸ்ரேல் மீது மோதி தகர்க்க அவர் திட்டமிட்டதாக விசாரணையில் ஒப்புக்கொண்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் செல்லும் விமானம் என்பதால் ஃபிளை துபாய் விமானத்தை தேர்வு செய்ததாகவும், பென் குரியன் விமான நிலையத்தின் முனையம் அல்லது மற்றொரு விமானத்தில் மோத திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இஸ்ரேலை அடைய முடியாவிட்டால் ஜார்டான் அமெரிக்க தளம் அல்லது டெல் அவில் கட்டிடத்தை மோத திட்டமிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும், கடந்த ஜூலை மாதம் இதுபோன்ற முயற்சிக்கு திட்டமிட்டு பின்னர் கைவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.