1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:54 IST)

ரூ.2.6 கோடிக்கு பழைய நாணயத்தை ஏலம் எடுத்த அடையாளம் தெரியாத நபர்!

பழைய நாணயங்களை இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கும் நபர்கள் உலகில் இருந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
அந்தவகையில் பழைய நாணயங்கள் ரூபாய் 2.6 கோடிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இங்கிலாந்து நாட்டில் கடந்த 1652 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நாணயம் ஒன்று சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. இந்த நாணயத்தை போட்டி போட்டுக்கொண்டு பலர் ஏலம் கேட்ட நிலையில் கடைசியாக 2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது
 
ஆனால் இந்த நாணயத்தை ஏலம் எடுத்த நபர் பற்றிய குறிப்பில் அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் என்று மட்டுமே இருந்ததாகவும் அவரது முழு விவரம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது