கொரோனா தடுப்பு நடவடிக்கை; அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இங்கிலாந்தில் விருது!
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்த நிலையில் கடந்த மே மாதம் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றிற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஹவுஸ் ஆப் காமன்ஸில் விருது வழங்கப்பட்டுள்ளது.