திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:29 IST)

சிஎஸ்கே தக்க வைத்து கொண்ட நான்கு வீரர்கள் இவர்கள் தான்!

வரும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்கும் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வரும் ஜனவரி மாதம் இந்த ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக்கொள்ளும் நான்கு வீரர்கள் குறித்த பட்டியலை இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நால்வரையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மற்ற அணியில் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை குறித்து தற்போது பார்ப்போம்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில்நரைன், ஆந்ரே ரஸல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கனே வில்லியம்சன்
 
மும்பை இந்தியன்ஸ்: ரோகித்சர்மா, ஜஸ்பிரித் பும்ரா
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட்கோலி, கிளன் மேக்ஸ்வேல்
 
டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப்பண்ட், பிரித்விஷா, அக்‌ஷர் படேல், நோர்ட்ஜே
 
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்