வட கொரியா அதிபரின் சொகுசு வாழ்க்கை : அதற்கு நேர்மாறாக பஞ்சத்தில் தவிக்கும் மக்கள்..
வடகொரிய அதிபரான கிம்ஜாங் உலக நாடுகளுக்கான நாட்டாமை அண்ணனான அமெரிக்காவையே ஏவுகணை வைத்து தகர்ப்போம் என்று மிரட்டியது. அப்படி மிரட்டியது அந்த நாட்டில அதிபரான கிம்ஜாங் தான்.
உலக நாடுகள் அவரை எப்படி பார்க்கின்றன என்பது அவர் தன் அண்டை நாடான தென்கொரியாவிடம் நடந்து கொள்ளும் முறையிலிருந்தே தெரியும்.
எப்படியோ அமெரிக்காவுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த கின் தன் எதிரிநாடாக நினைத்த தென்கொரிய அதிபரின் உதவியால் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசும்படியான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கான அச்சாணியாக சிங்கப்பூரில் நடந்த மாநாட்டிலும் வடகொரியா - அமெரிக்கா இடையே பகைமை மறந்து நட்பு ஏற்பட்டது.
அதேபோல தென் கொரியாவுடனும் அவர் நட்பு பாராட்ட தொடங்கினார். இந்நிலையில் தன் நாட்டில் ஆயிரம் பஞ்சங்களை வைத்துக்கொண்டு அவர்ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை நடத்துவது பற்றி பலவாறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
சமீபத்தில் கூட அவர் பலகோடி மதிப்புள்ள ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.தன் நாட்டில் பல மில்லியன் மக்கள் உண்ண உண்வின்றி பசியால் இருக்க கிம்ஜங் இப்படி ஊதாரித்தனம் போல பணத்தை காருக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் செலவழிப்பது கண்டு மக்கள் மனக்கொதிப்பில் உள்ளனர்.