பிஸ் ஆன் மி: நாய்கள் சிறுநீர் கழிக்க சாலை எங்கும் டிரம்ப் சிலைகள்

Last Updated: வியாழன், 11 அக்டோபர் 2018 (09:14 IST)
அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிக்க சாலைகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலைகளை வைத்து அதனோடு பிஸ் ஆன் மி என்ர வாசகமும் எழுதப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோரங்களில் உள்ள புல் பகுதியில்தான் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த வளர்க்கப்பட்ட புல் பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகலை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார். 
 
இந்த சிலைகளுடன் பிஸ் ஆன் மி என்ர வாசகமும் வைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக நாய்களுக்காக வைக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து சிலை வடிவமைப்பாளரிடம் கேட்ட போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார். 
 
அதிபராக இருக்கும் டிரம்ப் தனது கடமைகளை ஒழுங்காக செய்வது இல்லை. எனவே இந்த கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு சிலைகளை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :