செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 மார்ச் 2025 (11:25 IST)

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

War Ship

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வடகொரியா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

வடகொரியா - தென்கொரியா நாடுகள் இடையே கொரியா பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரச்சினை இருந்து வருகிறது. வடகொரிய அதிபரான கிம் ஜாங் அன், தினம் தினம் யோசித்து வித்தியாசமான முறையில் தென்கொரியாவை டார்ச்சர் செய்து வருபவர். சில மாதங்களுக்கு முன்பாக பறக்கும் பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென்கொரியாவுக்குள் விட்டு வம்பு செய்தார்.

 

தென்கொரியாவும் வடகொரியாவை சமாளிப்பதற்காக அடிக்கடி அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை எடுத்து வருகிறது. அவர்களை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது.

 

இந்நிலையில்தான் சமீபத்தில் அமெரிக்காவின் விமானங்கள் தாங்கிய போர்க்கப்பல் ஒன்று கொரிய தீபகற்ப பகுதியில் நுழைந்துள்ளது. இது வடகொரியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நேரடியாகவே அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள கிம் ஜாங் அன்னின் சகோதரி ஜிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

பொதுவாக இதுபோல அமெரிக்காவுடன் முட்டும்போதெல்லாம் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் ஏவி மிரட்டிக் காட்டுவது வழக்கம் என்பதால் சில நாட்களில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K