தொடர்புடைய செய்திகள்
- கருவிழி சவரம்; அதிர்ச்சியளிக்கும் சீன மருத்துவம்
- வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
- மருத்துவ குணம் நிறைந்த தேனின் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்
- தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
- கால்சியத்தை ஈடுகட்டும் சத்தான உணவு வகைகள் எவை தெரியுமா...!
2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று அறிவிக்கப்பட்டது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் 2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தார். மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஸ், மைக்கேல் யங் ஆகிய மூன்று பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
சர்க்காடியன் கடிகாரம், நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ள உயிர் கடிகாரம் பற்றிய கண்டுபிடிப்புக்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை ரூ.7 கோடியை மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
அடுத்த கட்டுரையில்
