வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (07:58 IST)

வேலைநீக்கத்தை அடுத்து சலுகைகள் கட்.. கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி..!

கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு சில சலுகைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகளாவிய பொருளாதார மந்த நிலை பணம் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் நுட்ப நிறுவனங்களின் லாபம் குறைந்து வருவதை அடுத்து பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் 12,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் என்பதும் இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பணிநீக்க நடவடிக்கையை அடுத்து மசாஜ்,அ கபே, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. அது மட்டும் என்று இனி அலுவலகங்களில் ஸ்டாப்ளர், செல்லோ டேப் ஆகியவை ஊழியர்களுக்கு வழங்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva