1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:26 IST)

சாக்லெட் மூலம் பரவும் புதிய நோய்த் தொற்று !!WHO எச்சரிக்கை!

belgian chocolate
ஏற்கனவே உலகில் கொரொனா தொற்று பல்வேறு வடிவங்களில் பரவும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் பெல்ஜியம் சாக்லெட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு சால்மோனெல்லா என்ற நோய் தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஐரோப்பியாவில் பெல்ஜியம் சாக்லெட் சாப்பிட்ட சுமார் 151 குழந்தைகளுக்கு சால்மோனெல்லா  நோய்த் தொற்று உருவாகியுள்ளது. இந்த நோய் இதுவரை 11 நாடுகளில் பரவியுள்ளது. லண்டன் தலை நகரில் மட்டும் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,9 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய்த் தொற்றால் பசியின்மை, உடல் வலி, 104 டிகிரி வரை காய்ச்சல்,   நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும், இதனால் உயிரிழப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் சாக்லெட் இந்தியா உள்ளிட்ட சுமார் 113 நாடுகளுக்கு ஏற்றுமதியாவது குறிப்பிடத்தகக்கது.