1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (19:56 IST)

போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Chennai
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களின் பொதுப்பலகைகளில் போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது .

இதுகுறித்து சென்னை  மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மா நகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல் சாலை, மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில்  செங்குத்துப் பூங்காக்கல் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்து   நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளது.