1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. netyan yagu loosing his primeminister post

தேர்தலில் தோல்வி! - பிரதமர் பதவியை இழக்கும் நெதன் யாகு!...

netanyahu
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் நெதன் யாகு. இவர்தான் காசா நாட்டை உருக்குலைய செய்தார். காசா நாட்டில் அப்பாவி மக்கள் பல லட்சம் பேரை கொன்று குவித்தார். அதில் பல குழந்தைகளும் அடக்கம். இதனால் பல நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளானார்.

ஒருபக்கம் அமெரிக்காவோடு சேர்ந்து ஈரான் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்தான் ஈரானின் உட்சத் தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் இஸ்ரேலில் தேர்தல் நடந்தது. அதில் நெதன்யாகுவின் அரசியல் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கிறது.

இதையடுத்து இஸ்ரேலின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவு பெருகி வருவதால் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் சூழல் உருவாகியிருக்கிறது.

19 தொகுதிகளை வென்ற பாலஸ்தீன அரபுக் கட்சிகள் ஆதரவை அறிவித்துள்ளதால் எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் 67-ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை தாண்டி ஆதரவிருப்பதால் ஐசன்கோட் விரைவில் பிரதமராக வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பேத்தி திருமண சர்ச்சை - வருத்தம் தெரிவித்த துரை முருகன்