1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (09:54 IST)

சோகத்தில் முடிந்த விமான சாகசம்.. வெடித்து சிதறிய விமானம்! – வைரலாகும் வீடியோ!

Planes crash
போர்ச்சுக்கலில் விமான சாகசம் ஒன்று நடந்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Planes crash


போர்ச்சுக்கல் நாட்டில் பெஜா விமான நிலையத்தில் நேற்று மாலை பெஜா விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் 6 சிறிய ரக விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பல்வேறு வகையில் விமானங்கள் பறந்து சாகசம் செய்து வந்த நிலையில் திடீரென ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேறொரு விமானத்தில் மோதி சென்றது.

மேலும் அந்த விமானம் முழு கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தை இயக்கிய விமானி பலியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமான சாகசம் பார்க்க வந்த மக்களை இந்த சம்பவம் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K