செவ்வாயில் இறங்கிய ரோவர் - உயிர்வாழும் சாத்தியத்தை கண்டறியுமா?
செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்கலம் வெற்றிகரமாக ததையிறங்கி தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
நாசா அனுப்பிய ரோபோட்டிக் ஓவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காக இந்த விண்கலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், விண்கலத்தில் இருந்து ரோபோடிக் ரோவர், ஜெசிரோ பள்ளத்தில் இந்த நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது. இதன்பிறகு செவ்வாயை படம்பிடித்து முதல் படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. ஓராண்டுக்கு (687 நாட்கள்) ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.