ஞாயிறு, 23 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 22 மார்ச் 2025 (17:53 IST)

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

சாமிக்கு யார் ஆரத்தி எடுப்பது என இரண்டு பூசாரிகளுக்குள் சண்டை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்த கத்திக்குத்தில் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள   அனுமன் கோவிலில் இரண்டு பேர் பூசாரிகளாக உள்ளனர். நேற்று மாலை, சாமிக்கு ஆரத்தி எடுப்பது யார் என இரண்டு பூசாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி, அடிதடியாக மாறியது.
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஒரு பூசாரி, கத்தியை எடுத்து சக பூசாரியை படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
 
இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் வழங்கினர். தப்பியோடிய பூசாரியை சில மணி நேரங்களில் காவல்துறை கண்டுபிடித்து கைது செய்தது.
 
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
சாமிக்கு ஆரத்தி எடுப்பதைச்சுற்றி ஏற்பட்ட தகராறில், ஒரு பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva