திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:15 IST)

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

Tiruvannamalai

திருவண்ணாமலையில் சத்துணவு முட்டை விவகாரத்தில் மாணவனை ஊழியர்கள் தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அரசின் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சத்துணவில் வாரம்தோறும் சத்தாண உணவுகள், முட்டை, பயறு வகைகள் உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருகின்றன

 

திருவண்ணாமலையில் உள்ள பள்ளி ஒன்றில் அவ்வாறாக மாணவன் ஒருவன் சத்துணவு பெற சென்றபோது அவனுக்கு சத்துணவு ஊழியர்கள் முட்டை வைக்கவில்லை என தெரிகிறது. அதுகுறித்து மாணவன் கேட்டபோது அவர்கள் முட்டை இல்லை என கூறியுள்ளனர். இதனால் மாணவன் சத்துணவு சமையலறையில் சென்று பார்த்தபோது முட்டை இருந்துள்ளது.

 

இதுகுறித்து முட்டையை வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள் என மாணவன் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் மாணவனை ‘ஏன் சமையலறையில் சென்று பார்த்தாய்?” என கேட்டு துடைப்பம் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கோபக்கனல்களை உருவாக்கியுள்ள நிலையில் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K