சந்திரயான்-2 அனுப்பிய முதல் தகவல்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விஞ்ஞானிகள் நேற்று அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்
நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் 16 நிமிடங்களில் மிகச்சரியாக புவி வட்டப்பாதையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நிலை நிறுத்தியது என்றும் விண்வெளி துறையில் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்
மேலும் பலகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு 48 நாட்களில் சந்திரனின் தென்துருவத்தில் சந்திராயன்-2 மெதுவான வேகத்தில் தரையிறங்கும் என்றும், சந்திராயன் விண்கலம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், இந்த விண்கலம் தற்போது தகவல்களை அனுப்பி வருவதாகவும், சந்திரனைப் பற்றிய தகவலை முழு தகவல்களையும் பெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்
சந்திராயன் - 2 விண்கலம் அனுப்பிய முதல் தகவல் குறித்து அவர் மேலும் விளக்கமாக தெரிவிக்கவில்லை எனினும் இது குறித்து விரிவாக அவர் இன்னும் ஒரு சில நாட்களில் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது