செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (13:51 IST)

ரகசிய பேரம் நடத்திய பர்வேஸ் முஷரப் ! ஆதாரமாக சிக்கிய வீடியோ !

பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டங்களில் அதிபராக பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் ஆவார். தன் மீதான பதிவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதைத் தடுப்பதற்காக 2008 ஆம் ஆண்டு பதிவியை ராஜினாமா செய்தார்
அதன்  பின்னர் தான் மீண்டும் அதிபராகி ஆட்சி அதிகாரத்தில் அமர அமெரிக்காவின் உதவியை நாடியது தெரியவந்ததுள்ளது.
 
இது சம்பந்தமாக சில வீடியோ காட்சிகளை பாகிஸ்தானைச் சேர்ந்த குல் புகாரி என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், நான் மறுபடியும் ஆட்சி  அதிகாரத்திற்கு வர வேண்டும். அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும் என்று முஸரப் கூறும் காட்சி அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.