1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (10:04 IST)

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு.

குழந்தைப் பேரிற்காக சாத்தூரில் உள்ள அர்சு மருத்துவமனையில் அடிக்கடி சென்று பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணி பெண்ணிற்கு, விருதுநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரது o+ ரத்தத்தைக் கொடுத்தன் மூலம் கர்ப்பிணிப்பெண் நோய்வாய் பட்டார். 
அரசு மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்ணைப் பரிசோதிக்கையில் அவருக்கு எச்.ஐவி தொற்று இருப்பதை  உறுதி செய்தனர். அதாவது ரமேஷ் என்பவரின் ரத்தத்தை 5 வகையான பரிசோதனைகளில் எதுவும், செய்யாமல் கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தியது தெரியவந்தது. 
 
இதற்க்குக்  மருத்துவர்கள் மற்றும் ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று கர்ப்பிணி குற்றம்சாட்டி உள்ளார்.
 
இப்பிரச்சனை பூதாகரமாக கிளம்பிய போதே எச்ஐவி தொற்று பாதித்த ரமேஷ் என்பவர் எலி மருந்து சாப்பிட்டு அரசு மருத்துவமனையில்  உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
 
இதனையடுத்து இன்று ரமேஷ் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.