செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (14:40 IST)

பாகிஸ்தான் வரை வந்துவிட்ட MPox தொற்று! - 3 பேருக்கு பாதிப்பு உறுதி!

monkey virus

ஆப்பிரிக்காவில் பரவி பல நூறு பேரை பலி கொண்ட குரங்கம்மை Mpox தொற்று தற்போது பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அம்மை வகை தொற்று நோய்களில் ஒன்றான குரங்கம்மை நோயின் பாதிப்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 13 நாடுகளில் குழந்தைகள், முதியவர்கள் என பலருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 524 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் மட்டுமே பரவி வந்த இந்த குரங்கம்மை தொற்று சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிலும் சிலருக்கு பரவியது கண்டறியப்பட்டது. இதுகுறித்து எச்சரித்த உலக சுகாதார அமைப்பு ஒரு வாரத்தில் இந்த தொற்று ஐரோப்பிய நாடுகளில் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்திருந்தது.
 

 

ஆனால் வேகவேகமாக பரவி வரும் இந்த குரங்கம்மை தொற்று தற்போது பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கம்மை பாதித்ததாக 3 பேர் பாகிஸ்தானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் வரை குரங்கம்மை தொற்று வந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K