வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2017 (19:35 IST)

கருவில் குழந்தை உதைத்ததால்; தாயின் வயிறு கிழிந்து ஆபத்து...

சீனாவில் பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால் அவரின் வயிறு கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது. 


 
 
சீனாவை சேர்ந்த ஷாங்க் என்ற 35 வயது நிரம்பிய பெண் நிறைமாத கர்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றில் மிகவும் அதிக அளவில் வலி இருந்திருக்கிறது. 
 
மேலும், மூன்று நாட்களில் வலி அதிகரித்து உள்ளது. வயிற்றில் குழந்தை உதைத்த வேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் குழந்தை வேகமாக உதைத்ததில் அந்தப் பெண்ணின் வயிற்றில் துளை விழுந்துள்ளது. 
 
இதையடுத்து வயிற்றில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளிவர தொடங்கியது. மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
 
சிகிச்சைக்கு பின்னர், வயிற்றின் சில பகுதிகள் வலிமை இல்லாமல் இருந்ததால் குழந்தை உதைத்தவுடன் வயிற்றில் துளை உருவாகியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.