குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை? உபி அமைச்சரின் சர்ச்சை பேச்சு


sivalingam| Last Modified திங்கள், 9 அக்டோபர் 2017 (05:06 IST)
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களின் தலைமையிலான அரசு அமைக்கப்பட்டதில் இருந்தே அவ்வப்போது அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு சகல வசதிகள் செய்து கொடுத்தும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களை சிறையில் அடைக்க வேண்டும் என அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


 
 
நிகழ்ச்சி ஒன்றில் உபி அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்ச ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியபோது, 'பள்ளிக்கு குழந்தைகள் வராவிட்டால் அவர்களது பெற்றோரை பிடித்து 5 நாள் சிறையில் அடைத்து வைப்பேன். அவர்களுக்கு உணவு, குடிநீர் என எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறினார். 
 
இதுகுறித்து விரைவில் சட்டம் ஒன்றை இயற்ற உள்ளதாகவும், இந்த சட்டத்தால் தனக்கு மரண தண்டனை கிடைத்தாலும் அதையும் சந்தோஷத்தோடு ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.அ அமைச்சர் பிரகாஷ் ராஜபர் பேசிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :