உச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா!

உச்சிமுகந்து ஜெயலலிதா என பெயர் வைத்த சசிகலா!


Caston| Last Modified செவ்வாய், 10 அக்டோபர் 2017 (17:57 IST)
ஐந்து நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகாலா ஜெயலலிதா பாணியில் இரண்டு குழந்தைகளுக்கு இன்று பெயர் வைத்துள்ளார். அதில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்றே பெயர் வைத்தார்.

 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி 5 நாட்கள் அவசர பரோலில் வெளிவந்தார். பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
 
குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை தினமும் வந்து சந்திக்கும் சசிகலாவை பார்க்க ஏராளமான அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிகின்றனர். இந்நிலையில் இன்று அவரை பார்க்க வந்த கூட்டத்தில் தம்பதிகள் இருவர் குழந்தைகளுடன் நின்றதை பார்த்த சசிகலா அவர்களை அழைத்தார்.
 
அவர்களிடம் இருந்து குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கி ஜெயலலிதா பாணியில் உச்சிமுகந்து பெயர் வைத்தார். அதில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா எனவும், மற்றொரு குழந்தைக்கு ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் பெயரையும் வைத்தார் சசிகலா.


இதில் மேலும் படிக்கவும் :