1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 மே 2022 (23:20 IST)

இங்கிலாந்தில் பரவும் குரங்கு அம்மை நோய்

monkey virus
இங்கிலாந்தில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் திண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்குச் சென்றறு லன்டன் திருப்பிய நிலையில் அவருக்குக் குரங்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்ததனர்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  அதனால், அவருடம் விமானத்தில் அருகில் அமர்ந்து வந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், லண்டனில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு குரங்கு அம்மை நோய்  தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  அவர் ஏற்கனவே இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் பயணிக்காத நிலையில் அவருக்கு இந்த  நோய்த் தொற்று எப்படி ஏற்பட்டது என விசாரிக்கப்படு வருகிறது.

இந்த நோய் தொற்று எளிதில் ஏற்படாது எனிலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகினால் இந்த நோய்  ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, முகுகுவலி, குளிர், சோர்வு, ஆகிய அறிகுறிகள் இருக்கும், மேலும், சுவாசப்பாதை, கண், மூக்கு, பிளவு ஏற்பட்ட தோல் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் ஏற்படும் என கூறப்படுகிறது.